பெக்டர் நட்டி நட்ராஜ், மாயமான தம்பதியை தேடுகிறார். திடீரென்று ஒருநாள் மாயமான நிஷாந்த் ரூசோ மட்டும் தனது வீட்டுக்கு வருவதோடு, அவருடன் இருந்த பாடினி பற்றி எதுவும் தெரியாத மனநிலையில் இருக்கிறார்.
பாடினியின் நிலை கேள்விக்குறியாக இருப்பதால், வேறு பாணியில் நட்டி நட்ராஜ் தனது விசாரணையை மேர்கொள்ளும் போது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அந்த உண்மைகள் மூலம் பாடினிக்கு என்ன ஆனது? என்பதையும் வீட்டு வேலைக்காரரின் கொலைக்கான காரணத்தையும், பல திருப்பங்களுடன் கூடிய கிரைம் திரில்லர் படமாக மட்டும் இன்றி மக்களுக்கான விழிப்புணர்வு பாடமாகவும் சொல்வது தான் ‘சீசா’.
தொடர்ந்து பல படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் நட்டி நட்ராஜ், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த் ரூசோ, ஒரே கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் பாராட்டும்படி நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பாடினி, குடும்ப பாங்கான முகத்தோடு அளவான அழகு மற்றும் நடிப்பு என்று கவனம் ஈர்ப்பவர், பாடல் காட்சிகளில் தன்னால் கவர்ச்சியாகவும் நடித்து கவனம் ஈர்க்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
நிஷாந்த் ரூசோவின் நண்பராக நடித்திருக்கும் மூர்த்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஆதேஷ் பாலா, வீட்டு வேலைக்காரராக நடித்திருக்கும் மாஸ்டர் ராஜநாயகன், பாடினியின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் அரவிந்தராஜ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
காதல் பாடல், ஆன்மீக பாடல் என்று இரண்டிலும் அசத்தியிருக்கும் இசையமைப்பாளர் சரண்குமார், பின்னணி இசையையும் நிறைவாக கொடுத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர்கள் பெருமாள் மற்றும் மணிவண்ணன் திரைக்கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்கள்.
கிரைம் திரில்லர் ஜானர் என்றாலும் அதன் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் விழிப்புணர்வு மெசஜை படத்தொகுப்பாளர் வில்சி ஜெ.சசி, பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விட, சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தகைய ஆபத்தானவர்கள் என்பதை தன் கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கும் தயாரிப்பாளர்
டாக்டர்.கே.செந்தில் குமார், சிறிய வேடம் ஒன்றில் தடுமாற்றம் இன்றி நடித்திருக்கிறார்.
திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் குணா சுப்பிரமணியம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு படமாக இருந்தாலும் அதை கிரைம் திரில்லர் ஜானரில் மட்டும் இன்றி காதல் காட்சிகளையும் சேர்த்து கலர்புல்லான கமர்ஷியல் படமாகவும் கொடுத்திருக்கிறார்.
பல திருப்பங்களுடன் பயணிக்கும் திரைக்கதை மற்றும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு மிக்க காட்சிகளுடன் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் இயக்குநர் குணா சுப்பிரமணியம், கதை சொல்லில் காட்டியிருக்கும் வித்தியாசம் மற்றும் மேக்கிங் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
எம்பாமிங் செய்யப்பட்ட சடலம், குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு என்ன ஆகும்? உள்ளிட்ட சில கேள்விகளுக்கு சரியான விடை சொல்லாமல் விட்டிருந்தாலும், இரண்டாம் பாகத்திற்கான ஒரு லீடாக அதை வைத்திருக்கும் இயக்குநர் குணா சுப்பிரமணியம் கிரைம் திரில்லர் மற்றும் விழிப்புணர்வு இரண்டையும் சரியான அளவில் கையாண்டு கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், ’சீசா’ இளைய தலைமுறையினரை சிந்திக்க வைக்கும்.
Ratings : 3/5



