கல்வியை தடுப்பது கடவுளாக இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை சொல்லும்படம்தான் ‘சார்’. ’கன்னிமாடம்’ படத்திற்குப் பிறகு நடிகர் போஸ் வெங்கட் இரண்டாவதாக இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் விமல், சாயா தேவி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். படம் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
மாங்கொல்லை ஊரில் 1960- 1980களில் நடக்கும் கதைதான் இந்த ‘சார்’. அந்த ஊரில் உயர்சாதியை சேர்ந்த தலைவர் ஜெயபாலன், ஊரில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற்று முன்னேறக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். இதோடு சாதிப்பெருமையும் சேர்ந்து கொள்ள கடவுள் பக்தியை அந்த ஊர் மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார். அந்த ஊரில் இருக்கும் பள்ளிக்கூடத்தை இடிக்க வேண்டும் என்பதே லட்சியமாகக் கொண்டிருக்கிறார். இதை எதிர்த்து அந்த ஊருக்கு வரும் அண்ணாதுரை வாத்தியார் அந்த ஊர் மக்களுக்கு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்து கல்வி போதிக்கிறார். அவர் ஆரம்பித்த ஆரம்பப்பள்ளியை மகன் சரவணன் நடுநிலைப்பள்ளியாக்குகிறார். சரவணன் மகன் விமல் அந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக்கி அந்த ஊர் மக்களை கல்வியறிவில் மேம்படுத்த வேண்டும் என்று சொல்கிறார். காலம் மாறி தலைமுறைகள் கடந்தாலும் சாதியும் கடவுள்…
சீரியஸான கதைக்களம் எடுத்திருப்பதால் ஆடல், பாடல், காதல் என முதல் பாதியில் ரசிகர்களை எண்டர்டெயின் செய்வோம் என எடுத்திருக்கும் விஷயம், இடைவேளை வரையிலுமே கதைக்கரு பார்வையாளர்களுக்கு அயர்ச்சி தருகிறது. தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறை அந்த ஊர்மக்களுக்கு கல்வியறிவு தருகிறார்கள் எனும்போது அந்த ஊரில் ஒருவர் கூட அந்தக் கல்வியால் பயன்பெறவில்லையா? ஊரில் என்ன விஷயம் மாறியிருக்கிறது போன்றவை அழுத்தமாகப் பதிவு செய்யப்படவில்லை. படத்தில் கதாநாயகியாக வரும் சாயாதேவியின் கதாபாத்திரமும் வழக்கமான சினிமா நாயகியாக அணுகப்பட்டு வீணடிக்கப்பட்டிருக்கிறது.
ஒடுக்கப்பட்டவங்க மேல வராம இருக்க நீங்க முதல்ல கைவைக்கற இடம் கல்விதானே?’, ’பள்ளிக்கூடத்தை அழிச்சிட்டா கல்வியை அழிக்க முடியும்னு நினைக்கறீங்களா?’ போன்ற வசனங்கள் ஷார்ப். முதல் பாதியில் சுவாரசியமாக
சுவாரசியமாக இருந்தாலும் பருத்திவீரன் சரவணன் சித்தப்பா அவர்களின் நடிப்பு நம்மை கண்கலங்க வைக்கிறது அப்படி ஒரு நடிப்பை நாம் எந்த ஒரு படத்திலும் பார்த்திருக்க முடியாது. அவ்வளவு அழகான கேரக்டரை கொடுத்த போஸ் வெங்கட் அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். இத்திரைப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் அவ்வளவு அழகாக அவர்களது கதாபாத்திரத்தை நடித்து இருக்கிறார்கள். முக்கியமாக எங்கள் பருத்திவீரன் சித்தப்பாவின் நடிப்பு நமக்குள் ஒருவர் கஷ்டப்படும்போது நம்மால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுவோம் என்பதற்கான நடிப்பு நமது சித்தப்பாவின் நடிப்பிற்கு தலை வணங்குகிறேன். விமல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருக்கிறார். சமூகத்திற்கு தெரிய வேண்டிய புரிய வேண்டிய திரைப்படமாக சார் திரைப்படம் அமைந்திருக்கிறது.
ஆக மொத்தத்தில் இந்த ’சார்’ படம் எடுத்துக் கொண்ட கதையை வலுவாக சொல்ல தடுமாறி பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது.
மார்கழியில் மக்களிசை டிசம்பர் 26ல் சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது. இயக்குனர் பா.இரஞ்சித் தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுப்பில் துவங்கப்பட்ட பிரமாண்டமான இசை நிகழ்ச்சியான ‘மார்கழியில் மக்களிசை’…
வீரவணக்கத்தின் புரட்சிப் பாடலை டாக்டர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டார்….. அனில் வி.நாகேந்திரன் இயக்கிய வீரவணக்கம் திரைப்படத்தின் இரண்டாவது பாடலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாக்டர் தொல்.…
*தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!* பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள…