Teenz Movie Review

தமிழ் சினிமாவில் எப்போதும் புதுமை எதிலும் புதுமையை புகுத்தி ரசிகர்களின் அறிவை ஒரு போது குறைத்து மதிப்பிடாத பார்த்திபன் இந்த முறை டீன்ஸ் மூலம் அப்படி ஒரு அனுபவத்தை தந்தாரா பார்த்திபன், பார்ப்போம்.

டீன்ஸ் திரை விமர்சனம் | Teenz Movie Review

கதைக்களம்

12 சிறுவர்கள் ஆரம்பத்திலேயே தாங்கள் சிறுவர்கள் இல்லை பாரீன் போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களை பெற்றொர்கள் தங்களுக்கு ஈகுவலாக பார்க்க வேண்டும் என்று பேசுகின்றனர்.

அத்தகைய பேச்சில் தாங்கள் பெரியவர்கள் என்று நிரூபிக்க, ஒரு சிறுமியின் பாட்டி ஊரில் பேய் இருப்பதாக சொல்ல அதையும் பார்த்துவிடலாம் என பள்ளிக்கு கட் அடித்து செல்கின்றனர்.

டீன்ஸ் திரை விமர்சனம் | Teenz Movie Review

அப்படி செல்லும் வழியில் ஒரு பையனை இழுத்துக்கொண்டு 13 பேராக செல்ல, செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை பெறுகிறது.

அதை தொடர்ந்து காட்டு வழியில் சிறுவர்கள் பயணிக்க, செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து செல்கின்றனர். என்ன என்று புரியாமல் சிறுவர்கள் முழிக்க, அடுத்தடுத்து தொலைந்து போகும் சிறுவர்களை மற்ற சிறுவர்கள் தேட, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

டைட்டில் கார்டிலேயே பார்த்திபன் நம்மை படத்திற்குள் கொண்டு வருகுறார். படத்தில் நடித்த சிறுவர்களின் பெயர்களை வைத்து ஒரு பாடலாக விவரித்து அவர்கள் குணாதிசியம் சொன்ன விதம் சூப்பர்.

அதோடு அந்த சிறுவர்கள் அனைவரும் எதோ பெரிய மனிதர்கள் போல் ஆரம்பத்திலேயே பேசுவது நமக்கு கொஞ்சம் எரிச்சல் என்றாலும் இந்த ஜெ சீ கலாச்சாரத்தில் வளர்பவர்களுக்கு நியாயமாகவே தெரியும்.

படத்தின் முதல் பாதி அடுத்து என்ன, இவர்களுக்கு என்ன ஆனது என்ற ஒரு பதட்டத்தை ஏற்படுத்தினாலும், பேயா, அமானுஷியமா இரண்டாம் பாதியில் இதற்கான லாஜிக்கை பார்த்திபன் உடைக்கும் இடம் அட இப்படியும் யோசிக்கலாமே என்று கூற வைக்கின்றது.

அதிலும் இடைவேளை போது மலைப்பாம்பு வயிற்றை சிறுவர்கள் கிழிக்கும் இடம் பதட்டம் தான். இப்படி முதல் பாதி முழுவதும் பல கேள்விகுறியுடன் நகர்வது சுவாரஸ்யம்.

ஆனால், இரண்டாம் பாதியில் இவர்கள் தொலைவதற்கான காரணம் சுவாரஸ்யமான டாபிக் என்றாலும், அதை படமக்கிய விதம் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது.

அதோடு யோகிபாபு எல்லாம் எதற்கு வருகிறார் 2 காட்சியில் என்றே தெரியவில்லை, படத்திற்கும் அவருக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் பேஸ் வேல்யூகாகவே பயன்படுத்தியுள்ளனர்.

டீன்ஸ் திரை விமர்சனம் | Teenz Movie Review

மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் தன் நண்பன் விழுந்துவிட்டான் என்றதும், நண்பகர்களே அவனை சேர்ந்து காப்பாற்றியது உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது, இதிலும் அப்படியென்றாலும், இதில் பார்த்திபன் என்ற தேவதூதன் போல் ஒரு கதாபாத்திரம் வருவது தற்போது நாம் கதையில் யாரை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்து விடுகிறது.

படத்தின் பட்ஜெட் மிக குறைவு என்பது பல காட்சிகளின் தெரிகிறது, இமான் இசையில் எந்த பாடலும் பெரிதும் மனதில் நிற்கவில்லை.

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி.

பார்த்திபன் சொல்ல வந்த விஷயம், சிறுவர்களின் நடிப்பு.

பல்ப்ஸ்

சொல்ல வந்ததை சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாமல் நகர்த்தி சென்றது.

மொத்தத்தில் இந்த டீன்ஸ் சுவாரஸ்யம் இல்லாத ஒரு தேடல்.  

Ratings : 2/5

டீன்ஸ் திரை விமர்சனம் | Teenz Movie Review

Leave a Response