தன் மகனும் மகளும் ஆசைப்பட்ட வளர்த்த ஆட்டுக்குட்டி புஜ்ஜியை அந்த குடிகாரத் தந்தை விற்று விட யாரிடம் பெற்றார் என்ற விவரங்கள் ஏதும் கிடைக்காமல் அவனும் மகளும் அதைத் தேடி போக அந்த தேடலில் அவர்கள் வெவ்வேறு ஊர்களுக்கு போய் சுற்றித்திரிந்து சந்திக்கிற கஷ்ட நஷ்டங்கள் ஏராளம. புத்தியை தேடும் படலத்தில் நடப்பவை கிரைம் சொல்ல படங்களில் அரங்கேறுகிற சம்பவங்களை போல் பரபரப்பு கூட்ட புஜ்ஜி கிடைத்ததா இல்லையா என்பது படத்தின் கதை.
சிறுமிக்கு அண்ணனாக வருகிற சிறுவன் கார்த்திக் விஜய் ஆட்டுக்கறி விரும்பியதாக இருப்பது தங்கையின் ஆட்டுக்குட்டி மைதான நேசத்தை கண்டு அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்வது ஆட்டை தேடுவதில் சுறுசுறுப்பு காட்டுவது என தன் பங்களிப்பை சரியாக செய்திருக்க ஆதரவற்ற நிலையில் இருக்கிற தர்ஷினி என்ற கதாபாத்திரத்தை வருகிற அந்த டீனேஜ் பெண் ஆட்டை தேடுகிற சிறுவனுக்கும் சிறுமிக்கும் ஆதரவாக நிற்பது விலை போன ஆட்டை கசாப்பு கடையில் இருந்து நீக்க வன்கொடை போல புத்திசாலித்தனமாக பணம் வசூலிப்பது என கவனிக்க வைக்கிறார் தன் முதலாளி அம்மாவின் எதிர்ப்பை சம்பாதித்து மனம் நொறுங்கும்போது சற்றே கலங்கவும் வைக்கிறார்.
பண்ணை தோட்டம் என பெரும் சொத்துக்கு அதிபதியாக இருந்தாலும் எளிய மனிதனாய் வளம் வருவது ஆட்டை தேடுகிற சிறார்கள் ஆபத்தில் சிக்கி இருப்பது தெரிந்து அவர்களை மீட்டு கொண்டு வர முழுமையான ஈடுபாடு காட்டுவது என மனதுக்குள் நிறைகிறார் இளைஞர் கமல் குமார்
நேர்மையான துணிச்சலான காவல்துறை அதிகாரியாக வருகிற நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி இன்ன பிற பாத்திரங்களில் லாவண்யா கண்மணி நக்கலட்சுமியின் கறிக்கடைபழையாக வருகிறவர் என பலரும் கதையின் தன்மையை உணர்ந்து நிலைத்திருக்க கார்த்திக் வரிகளில் அமைந்த புஜ்ஜி புஜ்ஜி என் செல்ல தங்கம் பாடலை தாலாட்டின் இடத்துடன் ரசிக்கும்படி வழங்கி இருக்கிறார் கார்த்திக் ராஜா
அருண்மொழிச் சோழனின் ஒளிப்பதிவும் சரவணன் மாதேஸ்வரனின் படத்தொகுப்பு கதைக்களத்தை தாங்கி பிடித்து இருக்கின்றன தொலைந்த ஆடு கறிக்கடையின் கத்தியில் சிக்குவது பின்னர் புது கட்டட பணிக்காக விலை போவது என எப்படி எப்படியோ கிளை பிடித்து பயணிப்போம் திரை கதையோட்டத்தில் காமவெறி போலீஸிடம் சிறுமைகள் அகப்படுவது சிறுமியின் அப்பாவுக்கு அசம்பாவிதம் நேர்ந்து உயிர் கிடைக்கும் போராடுவது என அதிர் புதரி அம்சங்கள் அடுக்கடுக்காய் அரங்கேறுகின்றன
காட்சிகளை பரபரப்புடன் விறுவிறுப்போடு நகர்த்தியிருக்கும் இயக்குனர் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தால் மக்களின் வரவேற்பை பெரிதாய் அறுவடை செய்திருக்கலாம் ஏற்கனவே சில விருதுகளை பெற்றிருக்கும் இந்த படத்துக்கு இன்னும் சில உயரிய விருதுகள் கிடைக்கப் போவதும் குழந்தைகள் மனதில் மனிதர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அழுத்தமாக பதியப்போவது உறுதி குழந்தைகள் பட வரிசையில் வெல்லக்கட்டி.
Ratings : 2.5/5



