பிக்பாஸ் புகழ் ஆரி, பவித்ரா நடிப்பில் சுந்தர பாண்டி இயக்கத்தில் வெளிவந்துள்ள கிரைம் திரில்லர் Fourth Floor படம் எப்படியுள்ளது பார்ப்போம்.
ஆரி மும்பையில் வேலை பார்த்து வர, அவருக்கு தன் எக்ஸ் காதலி அனுவிடம்(பவித்ரா) இருந்து போன் வருகிறது, தான் ஒரு ஆபத்தில் இருப்பதாகவும் நீ வரவேண்டும் என்று. அதே நேரத்தில் சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்டில் ஹாரர் படம் எடுப்பதற்கு சில யுடியூபர்ஸ் வருகின்றனர்.
அதே அப்பார்ட்மெண்டில் 4வது மாடியில் ஆரி குடி வர, அதன் பின் அங்கு பல அமானுஷிய விஷயங்கள் தெரிகிறது.

ஆரிக்கு அந்த அப்பார்ட்மெண்டில் சிலர் நண்பர்கள் ஆகின்றனர், ஒரு நாள் ஒரு கும்பன் அப்பார்ட்மெண்டில் உள்ள சிலரை ஆரி கண்முன்பு கொள்கிறது, ஆரி எவ்வளவு தடுத்தும் முடியவில்லை.
ஆனால், பிறகு தான் தெரிகிறது அப்போது ஆரி கண்முன் இறந்தவர்கள் எல்லோரும் ஏற்கனவே இறந்தவர்கள், என தெரிய வர, அனு மற்றும் ஆரி குழந்தை எங்கே, ஏன் ஆரிக்கு மட்டும் அவர்கள் தெரிந்தார்கள் என்பதே மீதிக்கதை.
Ratings: 3/5
Pro Raja



