மாதவ் ராமதாசன் இயக்கத்தில், சரத்குமார், வையாபுரி, ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தின் விரிவான விமர்சனம் இங்கே பார்க்கலாம்.
நாகர்கோவில் பகுதியில் சட்டவிரோத செயல்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ஒரு தாதா மூர்த்தி (சரத்குமார்). எதற்கும் அஞ்சாத, எதிர்ப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் சுபாவம் கொண்டவர். ஒரு யூடியூப்பர் இவரைப் பற்றி அம்பலப்படுத்த முயன்று அடிவாங்கிச் சாலையில் வீசப்படுகிறார். இப்படிப்பட்ட கரடுமுரடான மனிதரின் மகளை (தேவிகா சதீஷ்), அதே கல்லூரியில் பயிலும் அருள் (இந்திரஜித் ஜெகஜித்) காதலிக்கிறான். இந்த விஷயம் மூர்த்தியின் கவனத்திற்கு வீடியோ ஆதாரத்துடன் செல்ல, ஆவேசமடைகிறார். அருளைக் கடத்திச் சென்று நடுக்கடலில் ஒரு மீன்பிடிப் படகின் ஐஸ் அறையில் அடைத்து வைக்கிறார். அங்கு நடக்கும் மோதல்களும், எதிர்பாராத விதமாக மூர்த்தியின் கால் படகின் இயந்திரத்தில் சிக்கிக்கொள்வதும், அதன்பின் நடக்கும் உயிர் போராட்டமுமே இந்தப் படத்தின் மீதிக் கதை.
Ratings : 2/5
Pro : Nikil Murugan



