விண்வெளி நாயகனின் பிறந்தநாள் பரிசாக முக்தா பி லிம்ஸ் தயாரித்து மணிரத்னம் இயக்கிய நாயகன்
நவம்பர் 6 உலகமெங்கும் வெளிவர உள்ளது
மணிரத்னம் இயக்கிய நாயகன்’ (21/10/1987)வெளிவந்து இன்றோடு 38 வருடங்கள் ஆகின்றன.
திரு.முக்தா சீனிவாசன் & திரு.முக்தா ராமசாமி அவர்களது முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில்
மணிரத்தினம் இயக்க, இசை இளையராஜா( 400 வது படம் )
1988 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது
மூன்று தேசிய விருதுகளை வென்றது…
வரதராஜ முதலியார் என்பவரின் வாழ்க்கையைத் தழுவி *நாயகன்*கதை எழுதப்பட்டிருந்தது.
இளைஞனான வேலுவும் வயதான வேலு நாயக்கரும் திரையில் உயிர் பெற்றிருந்தார்கள்..
” நாளைக்கு கணக்கு பரிட்சை சீக்கிரமா விட்டுடுவீங்களா ” என்று கேட்கும் இடம் வலி மிகுந்த வசனம்..நடிகை சரண்யாவுக்கு இது முதல் படம்.
நீங்க நல்லவரா கெட்டவரா என்னும் கேள்விக்கு, முதிர்ந்த வேலு நாயக்கரால் “தெரியலயேப்பா”என்று என்று ஒற்றை பதிலை கூறிய மணிரத்தினத்தின் நாயகன் திரைப்படம் மறுபடியும் உங்கள் பார்வைக்கு..
மகனாக ‘நிழல்கள்’ ரவி, மகளாக கார்த்திகா, மருமகனாக,போலீஸ் அதிகாரியாக நாசர் மற்றும் வீ. கே. ராமசாமி, டெல்லி கணேஷ், ஜனகராஜ், குயிலி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்
கதை, திரைக்கதை, இயக்கம் – மணிரத்தினம்
இசை இளையராஜா
வசனம் – பாலகுமாரன்
ஒளிப்பதிவு – பிசி ஸ்ரீராம்
எடிட்டர் – B. லெனின் V. T.விஜயன்
கலை – தோட்டா தரணி..
ஸ்டண்ட்- சூப்பர் சுப்புராயன்
நடனம் – சுந்தரம் மாஸ்டர்
மக்கள் தொடர்பாளர்கள் – சினிநியூஸ் செல்வம், வி.பி.மணி
மறு வெளியீடு மக்கள் தொடர்பாளர்கள் – டைமண்ட் பாபு, சாவித்ரி.